MI NewYork - Major League 2023 Champions [Image source : Twitter/@mufaddal_vohra]
அமெரிக்க ஐபிஎல் இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்ற MI நியூ யார்க் பட்டத்தை தட்டி சென்றது.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி போன்று அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், MI நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதி போட்டி டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு துவங்கியது .
இதில், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அரையிறுதியில் வெளியேற, லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் தகுதி சுற்றோடு வெளியேற சியாட்டில் ஓர்காஸ் (SOR) அணியும், MI நியூ யார்க் அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறின. இதில் டாஸ் வென்ற MI பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய சியாட்டில் ஓர்காஸ் (SOR) அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு, 183 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக டிகாக் மட்டும் 87 ரன்கள் எடுத்து இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினார்.
அதன் பிறகு களமிறங்கிய MI நியூ யார்க் அணியின் தொடக்க அட்டாக்காரர் டெயிலர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அதன் பிறகு களமிறங்கிய நிகோலஸ் பூரான் ருத்ர தாண்டவம் ஆடினார் என்றே கூறவேண்டும். 55 பந்துகளில் 10 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள் என 137 ரன்கள் அடித்து 16 ஓவரிலேயே அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பினர். 16 ஓவரில் 3 விக்கெட் இழந்து 184 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் MI நியூ யார்க் கோப்பையை தட்டி சென்றது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…