MLC Final23 [Image-MLC]
அறிமுக மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பைனலில் சியாட்டில் ஆர்கஸ் மற்றும் எம்ஐ நியூயார்க் அணிகள் பலப்பரிட்சை.
அமெரிக்காவின் மாபெரும் கிரிக்கெட் தொடராக நடப்பு ஆண்டில் ஐபிஎல் தொடர் போன்று மேஜர் லீக் கிரிக்கெட் எனும் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 அணிகளுடன் தொடங்கிய எம்.எல்.சி தொடரில் இறுதிப்போட்டி இன்று கிராண்ட் ப்ரைர் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. சியாட்டில் ஆர்கஸ் அணி தொடரில் வலிமை வாய்ந்த அணியாகவும், முதல் அணியாக இறுதிப்போட்டியில் நுழைந்தது.
முதல் குவாலிபயர் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியுடன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மற்றொரு அணியாக எம்ஐ நியூயார்க் அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்று எலிமினேட்டர் சுற்றில் வாஷிங்டன் ஃபிரீடம் அணியுடன் வெற்றி, மற்றும் இரண்டாவது குவாலிபயர் (சேலஞ்சர்ஸ்) போட்டியில் டெக்சாஸ் அணியுடன் வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த அறிமுக மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பைனலில் வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இரு அணிகளுக்கும் கடுமையான போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை. போட்டி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்குகிறது.
சியாட்டில் ஆர்கஸ் அணி:
குயின்டன் டி காக்(w), நௌமன் அன்வர், ஷெஹான் ஜெயசூர்யா, ஹென்ரிச் கிளாசன், ஷுபம் ரஞ்சனே, டுவைன் பிரிட்டோரியஸ், இமாத் வாசிம், வெய்ன் பார்னெல்(c), ஹர்மீத் சிங், ஆண்ட்ரூ டை, கேமரூன் கேனன், ஏஞ்சலோ பெரேரா, ஹேடன் வால்ஷ், நிஸ் ஜோன்ஸ், படேல், பானி சிம்ஹாத்ரி, மேத்யூ ட்ராம்ப்
மும்பை நியூயார்க் அணி:
ஷயான் ஜஹாங்கீர், டெவால்ட் ப்ரீவிஸ், ஸ்லேட் வான் ஸ்டேடன், டிம் டேவிட், நிக்கோலஸ் பூரன்(w/c), டேவிட் வைஸ், ஸ்டீவன் டெய்லர், ரஷித் கான், நோஸ்துஷ் கென்ஜிகே, டிரென்ட் போல்ட், எஹ்சான் அடில், கீரன் பொல்லார்ட், ஹம்மாட் ஆசம், சரப்ஜித் லடா, ஜேசன் பெஹ்ரெண்டா , ககிசோ ரபாடா, வக்கார் சலாம்கெயில், மோனாங்க் படேல், ஜஸ்தீப் சிங், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…