ஐபிஎல் தொடரில் மும்பை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் அடித்தது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 24-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிவந்த பட்லர் 3 சீக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 41 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்க, ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். 32 ரன்களுக்கு ஜெய்ஸ்வால் வெளியேற, அதிரடியாக ஆடிவந்த சஞ்சு சாம்சன், 42 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். மத்தியில் ஆடிவந்த சிவம் துபே, 42 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 ரன்களும், ஜோஸ் பட்லர் 41 ரன்களும் அடித்தனர். தற்பொழுது 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கவுள்ளது.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…