தமிழில் ஒரு ட்வீட்டாவது போடுவீங்களா? என மும்பை இந்தியன்ஸ் ரசிகர் செய்த கமெண்ட்டிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி, “கண்டிப்பா மச்சான்” என பதிலளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நெருங்கிவரும் நிலையில், தொடரில் பங்கேற்கும் அணிகள், தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்தெடுப்பதற்கான ஏலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், 57 வீரர்களை ரூ.143.69 கோடிக்கு ஏலத்தில் எடுத்தன.
அதனைதொடர்ந்து அணியினர், தங்களின் வீரர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். மேலும் ஐபிஎல் அணியினர், தங்களின் சமூகவலைத்தள பக்கங்களை ஆக்ட்டிவாக வைத்து வருகின்றனர். அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் அணி, ஹிந்தியில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அந்த பதிவின் கமெண்டில் மும்பை ரசிகர் ஒருவர், “தமிழில் ஒரு ட்வீட்டாவது போடுவீங்களா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
அதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி, “கண்டிப்பா மச்சான்” என பதிலளித்துள்ளது. தற்பொழுது இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தெலுங்கிலும் ஒரு பதிவு வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதற்கு சூரியகுமார் யாதவின் GIF படத்தை பகிர்ந்துள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…