மும்பைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 164 ரன்கள் அடித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 48- வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிவருகின்றது . இந்த போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் படிக்கல் – பிலிப் கூட்டணி களமிறங்கியது. இருவரும் அதிரடியாக விளையாட , 33 ரன்களில் பிலிப் தனது விக்கெட்டை இழந்தார்.இவரைத்தொடர்ந்து கேப்டன் விராட் 9 ரன்கள் , வில்லியர்ஸ் 15 ரன்கள்,துபே 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்கள். ஒருபுறம் சிறப்பாக விளையாடிய படிக்கல் 74 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய மோரிஸ் , 4 ரன்கள் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.இறுதியாக 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே அடித்தது. களத்தில் சுந்தர் 10* ரன்களுடனும் ,குர்கீரத் சிங் 14 * ரன்களுடனும் இருந்தனர்.165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கவுள்ளது.மும்பை அணியின் பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…