இன்றைய 36-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரோஹித் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.
இதைத்தொடர்ந்து, இறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா சொற்ப ரன்களில் வெளியேற சிறப்பாக விளையாடி வந்த குயின்டன் டி காக் அரைசதம் அடித்து 53 ரன்னில் பெவிலியன் சென்றார். மத்தியில் இறங்கிய குருனல் பாண்டியா நிதானமாக விளையாடி 34 ரன் எடுத்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தனர்.
177 ரன் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது. கடைசிவரை பொல்லார்ட் 34 , நாதன் கூல்டர் 24 ரன்களுடன் களத்தில் நின்றனர்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…