சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தமிழக வீரர் நடராஜன், முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக தமிழக வீரர் நடராசன் விளையாடி வருகிறார். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் இவரின் அதிரடி ஆட்டத்தால் இவருக்கு இந்தியா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து இவர் ஆஸ்திரேலியா தொடரில் அதிரடியாக விளையாடினார். இந்த தொடரில் நடராஜன் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு பதிலாக கலீல் அஹமது அணியில் சேர்க்கப்பட்டார்.
நடராஜன் அணிக்கு எப்போது திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் முழுவதும் விளையாடமாட்டார் என்று தகவல்கள் வெளியானது. இதுகுறித்து cricinfo வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பில், ஆஸ்திரேலியா சுற்றுப்பணத்திற்கு பின் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் நடராஜன் இரண்டு மாதங்கள் இருந்தார். அவரின் உடல்நிலையை கிரிக்கெட் அகடாமி மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நடராஜனுக்கு காயம் பெரிதாக இருந்ததால், அவரை விடுவிக்க ஹைதராபாத் அணி நிர்வாகத்திடம் பிசிசிஐ பேசும்.
மேலும் நடராஜன், தேசிய கிரிக்கெட் அகடாமியில் தனது உடல்தகுதியை நிருப்பிக்க வேண்டியகாகவும் cricinfo ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நடராசன் விலகியது, ஹைதராபாத் அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…