இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது..!

Published by
murugan

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இங்கிலாந்தில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், இறங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால், நியூஸிலாந்து அணி 32 ரன்கள் முன்னிலையில் இருக்கும்போது இந்திய அணி நேற்று தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ரோஹித் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் 81 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 73 ஓவரில் அனைத்த விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்தனர். இதனால், நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர் மத்தியில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக  41 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.  நியூசிலாந்து அணியில் டிம் சவுதி 4 விக்கெட்டும், ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டும் , கைல் ஜேமீசன் 2 விக்கெட்டும் பறித்தனர்.

139 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக  டெவன் கான்வே, டாம் லாதம் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே டாம் லாதம் 9 ரன்னில் வெளியேறினார். பின்னர், கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.  நிதானமாக விளையாடி வந்த டெவன் கான்வே 19 ரன் எடுத்து வெளியேற இதைத்தொடர்ந்து,  ராஸ் டைலர், கேன் வில்லியம்சன் உடன் கூட்டணி அமைத்தார்.

ஒரு புறம் சிறப்பாக விளையாடிய கேன் வில்லியம்சன் அரைசதம் விளாசி 52* ரன்கள் எடுத்தார். மற்றோரு புறம் நிதானமாக விளையாடிய ராஸ் டைலர் 47* ரன்கள் எடுக்க இறுதியாக நியூஸிலாந்து அணி 45.5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் முறையாக ஐசிசி நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் அணியாக நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு 12 கோடி ரூபாய் பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிக்கு 6 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

Published by
murugan
Tags: #INDvNZWTC21

Recent Posts

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

39 minutes ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

2 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

17 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

18 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

18 hours ago