நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் 2-வது போட்டி இன்று ராஞ்சியில் உள்ள JSCA மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்தில் இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினார். நிதானமாக விளையாடிய வந்த மார்ட்டின் கப்டில் 5ஓவரில் தீபக் சாஹர் ஓவரில் 31 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேன் வந்த வேகத்தில் 21 ரன் எடுத்து வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் டேரில் மிட்செல் 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து மத்தியில் இறங்கிய க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 34 ரன்கள் குவிக்க அடுத்தடுத்து களம் கண்ட வீரர்கள் சொற்ப ரன் எடுக்க இறுதியாக நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்ஷல் படேல் 2, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், அஸ்வின் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…