உலக கோப்பை தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் முதல் போட்டியில் நியூஸிலாந்து Vs இலங்கை இரு அணிகளும் மோதியது.இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியில் தொடங்க வீரர்களாக கருணாரட்னே, திரிமன்னே ஆகிய இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்தில் திரிமன்னே 4 ரன்னில் வெளியேறினார்.இறுதியாக இலங்கை அணி 29.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 136 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக கருணாரட்னே ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தனர்.
நியூஸிலாந்து அணி பந்து வீச்சில் மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினார்.நியூஸிலாந்து அணி 137 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக மார்டின் குப்டில், கொலின் மன்ரோ இருவரும் களமிறங்கினர்.
இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி திணறியது.இருவரின் கூட்டணியை பிரிக்க முடியாமல் இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் கதி கலங்கினார்.இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றனர்.
கடைசியாக நியூஸிலாந்து அணி 16.1 ஓவரில் 137 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்டின் குப்டில் 73 ரன்னும் , கொலின் மன்ரோ 58 ரன்களுடன் களத்தில் நின்றனர்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…