விராட் கோலியை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை. அவர் ஒரு அற்புதமான வீரர், உலகத்தரம் வாய்ந்தவர் என்று இங்கிலாந்து பந்துவீச்சாளர் மொயீன் அலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது. இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இலங்கைக்கு எதிரான தொடரில் இவரால் விளையாட முடியவில்லை.
தற்பொழுது இந்தியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணியில் மொயீன் அலி இடம்பெற்றுள்ளார். இதனையடுத்து அவர் ESPN ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், 200 விக்கெட்களை கைப்பற்றுவதற்கான இலக்கு, வெகு தொலைவில் இல்லை. அதனை அடைந்தபின் தான் மற்றொரு இலக்கை நிர்ணயிப்பேன் எனவும், தாம் நன்றாக இருப்பதாகவும், நீண்ட நாட்களாக விளையாட காத்திருந்தேன் என்றும், விளையாட தயாராக உள்ளதாகவும் கூறினார்.
மேலும் தனது பேட்டிங் திறனை மேம்படுத்த இதர வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டுள்ளதாக பேசிய அவர், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி குறித்து பேசினார். அப்பொழுது, விராட் கோலியை எப்படி அவுட்டாக்குவது என தெரியவில்லை. அவர் ஒரு அற்புதமான வீரர், உலகத்தரம் வாய்ந்தவர். ஆஸ்திரேலிய வெற்றிக்கு பின் அவருக்கு உத்வேகம் மேலும் அதிகரித்திருக்கும். ஏனென்றால் அவருக்கு பலவீனமே இல்லை. ஆனால் எங்களிடம் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார்.
கோலிக்கு எந்த விதமான பலவீனமும் இல்லை என்றும், கோலி என்னுடைய ஒரு நல்ல நண்பர். நாங்கள் கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் பேசமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…