கேரளா:ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கோரும் மனுவானது கேரளா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனை விசாரித்த நீதிபதி கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகர்கள் தமன்னா பாட்டியா மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் 10 நாட்களில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுக்களால் இளைஞர்கள் தங்கள் பணம் மற்றும் உயிரை மாய்த்து வருவது அதிகரித்துள்ளது.இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் பாலி என்பர் ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டுகளை சட்டவிரோதமானது என்று அறிவித்து தடை செய்யவேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இது மிகவும் முக்கியமான பிரச்சனை என்பதை அறிந்து,இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கான விளம்பரங்களில் இடம்பெற்ற பிரபலங்களான கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகர்கள் தமன்னா பாட்டியா மற்றும் அஜு வர்கீஸ் 10 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அவர்கள் தவிர, கேரள அரசிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மனு குறித்து மனுதாரர் பாலி கூறுகையில்,இப்போது ஆன்லைன் சூதாட்டம் மாநிலத்தில் வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும், குறைந்த வருமானம் உடையவர்களுக்கு நடுத்தர இலக்குகள் எளிதாக இருக்கும் என்றும் மோசடி தளங்களில் விழும் மக்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கை சேமிப்பில் எஞ்சியிருப்பதைப் பயன்படுத்தி இழக்கிறார்கள்என்றார்.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் கட்டக்கடாவைச் சேர்ந்த இஸ்ரோ ஊழியர் 28 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் மனுவைக் குறிப்பிட்டு, அந்த நபர் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் வலையில் விழுந்து ரூ.21 லட்சத்தை இழந்ததால் அதிலிருந்து மீளமுடியாமல் தனது உயிரை மாய்த்துக்கொண்டார் என்று பாலி குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி எனும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் தமிழக அரசு இயற்றிய அவசரச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சில மாதங்களுக்கு முன்னர் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…