இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி,இந்திய கால்பந்து அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக ரசிகர்களிடம் பேசியதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணிக்கு மக்களும்,ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும், இப்போது ரசிகர்களுக்குப் பிடிக்காவிட்டாலும், ஒருநாள் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் இந்திய கால்பந்து மாறும், களத்துக்கு வந்து ஆதரவு தாருங்கள் என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோவைப் […]
ஐபிஎல் 11வது சீசனை சென்னை அணி வென்றுள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. ஐபிஎல் 11வது சீசன் முடிவடைந்த நிலையில், கிரிக்கெட் கண்ட்ரி என்ற ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளம், ஐபிஎல் கனவு அணியை வெளியிட்டுள்ளது. அந்த அணியில், கோப்பையை வென்ற சென்னை அணியின் ஒரு வீரர் கூட இடம்பெறவில்லை. சுனில் நரைன், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ள அந்த கனவு […]
வரலாற்றில் முதல் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் வரும் ஜூன் 14-ந் தேதி விளையாட இருக்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜூன் 14 முதல் 18 வரை நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம் பிடித்திருந்தார். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை […]
உடல் முழுவதும் இந்திய மூவர்ணக்கொடி நிறத்தை பூசிக்கொண்டு, இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி, இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் காண வரும் ரசிகரான சுதிர் கவுதமை, கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள், எவரும் பார்க்காமல் இருந்திருப்பது கடினம். சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கவுதமை சச்சின் தெண்டுல்கர் பலமுறை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சுதீர் கவுதமை, இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி, தனது இல்லத்திற்கு நேரில் […]
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி , சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார். இவ்வாறு அப்ரிடி அறிவிப்பது 6-வது முறையாகும். ஆனால், இந்த முறை கிரிக்கெட் விளையாட இனி வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்தியத்தீவுகள், ஐசிசி வேர்ல்டு லெவன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, அப்பிரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடைகொடுத்து, மரியாதை செய்தனர். மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் கிரிக்கெட் அரங்குகள் மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட நலநதிக் கிரிக்கெட் […]
தினேஷ் கார்த்திக் இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் சஹாவிற்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. இதையடுத்து,ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடவுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போட்டி,வரும் ஜூன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.இப்போட்டியில் விளையாடும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஐபிஎல் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குணமடையாததால் சஹா விலகியுள்ளார். இந்நிலையில் சஹாவிற்கு பதிலாக தமிழக வீரர் […]
ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார் சல்மான்கான் சகோதரர் அர்பாஸ்கான். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டம் தொடர்பான வழக்கில், பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், தானே நகர போலீஸ் முன் விசாரணைக்கு ஆஜரானார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து, மகாராஷ்டிராவில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரில், சூதாட்ட கும்பலின் தலைவன் சோனு ஜலான் என்பவனை போலீசார் கைது செய்தனர். சோனு ஜலான் கைப்பட எழுதிய டைரியையும் பறிமுதல் செய்த போலீசார், அதை ஆய்வுக்குட்படுத்தினர். அதன் அடிப்படையில் […]
தென் ஆப்பிரிக்கா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட், இங்கிலாந்திடமிருந்து ஒருபோதும் எதிர்பார்த்திராத ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தை ஒருநாள் போட்டிகளில் வளர்த்து வரும் கேப்டன் இயன் மோர்கன் 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியை தோற்கடிக்க முடியாத அணியாக திகழச்செய்வார் என்று நம்புகிறார் . 14 ஆண்டுகால பிரமாதமான கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு ஏ.பி.டிவில்லியர்ஸ் எனும் 360டிகிரி ஓய்வு பெற்றுள்ளதால் தென் ஆப்பிரிக்காவுக்கும் கடினமே என்கிறார் ஆலன் டொனால்ட். இந்நிலையில் ஸ்கை ஸ்போர்ட்ஸில் ஆலன் டொனால்ட் கூறியதாவது,உலகக்கோப்பையை இங்கிலாந்து […]
ஏற்கெனவே ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் உள்ள 12 அணிகளுடன் மேலும் 4 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து, யு.ஏ.இ.அணிகள் முறையே 13 மற்றும் 14ம் இடத்தில் நுழைக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்து, நேபாள் ஆகிய அணிகள் இன்னும் 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடிய பிறகு தரவரிசையில் சேர்க்கப்படுவார்கள். ஏனெனில் தரவரிசைப்பட்டியலில் இணைய குறைந்தது இவ்வளவு ஒருநாள் சர்வதேச போட்டிகள் ஆடியிருக்க வேண்டியது நிபந்தனையாகும். இந்த புதிய அணிகளின் சேர்க்கையினால் மேலே உள்ள 12 அணிகளின் தரவரிசை நிலைகளில் […]
நேற்று முன் தினம் மே.இ.தீவுகளுக்கும் ஐசிசி உலக லெவனுக்கும் இடையே நடைபெற்ற டி20 போட்டிக்கு சர்வதேச போட்டி அந்தஸ்து வழங்கப்பட்டதை கேள்விக்குட்படுத்தும் விதமாக நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்களின் ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது. ஆட்டம் லைவ் ஆக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வர்ணனையாளர் நாசர் ஹுசைன் நடு மைதானத்தில் மைக்குடன் நின்று கொண்டிருந்தது அவ்வளவு நல்லதாகப் பார்க்கப்படவில்லை. சர்வதேச போட்டி என்றால் அதற்கான பொறுப்புடன் ஆடப்பட வேண்டும், ஆனால் வர்ணனையாளர் நடு ஆட்டத்தில் மைக்குடன் பீல்டர்களூக்கு அருகில் போய் […]
வேர்ல்டு லெவன் அணியை லண்டனில் நேற்று முன்தினம் ஒருதரப்பாக நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் 72 ரன் வித்தியாசத்தில் மிக எளிமையாகத் தோற்கடித்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி. ஐசிசி வேர்ல்டு லெவன் என்று இந்த போட்டியில் மட்டுமல்ல, இதற்கு முன் நடந்த பெரும்பாலான போட்டிகளிலும் தேர்வு செய்யப்பட்ட வேர்ல்டு லெவன் அணியில் ஃபார்மில் இல்லாத வீரர்களையும் தேர்வு செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் இதுபோன்ற கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு டி20 போட்டியின் சுவாரஸ்யத்தையே இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. […]
பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கொண்டுள்ள நட்பு குறித்து சமூகவலைத்தளங்கள் படங்களுடன் அலற, இது காதல்தான் என்று பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமா? என்று அங்கலாய்த்துள்ளார். இது தொடர்பாக என்.டி.டிவியில் கே.எல்.ராகுல் கூறும்போது, “ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமானதா? எனக்கு அவரை நீண்டகாலமாகத் தெரியும், நாங்கள் […]
திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தென் ஆப்பிரிக்காவின், உலகின் தலைசிறந்த வீர்ர் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனி இப்படிப்பட்ட 360டிகிரி சுற்றி சுற்றி அடிக்கும் வீரரைக் காண்பது அரிது. இவரது பீல்டிங், அணுகுமுறை, விக்கெட் கீப்பிங் பொறுப்பையும் ஏற்ற பெருந்தன்மை ஆகியவை டிவில்லியர்ஸை நிகரற்ற ஒரு வீரராகவே கருதத் தோன்றுகிறது.இந்நிலையில் ஆலன் டொனால்ட் ஸ்கை ஸ்போர்ட்ஸில் கூறியதாவது: 6 மாதங்களுக்கு முன்பாகக்கூட ஏ.பி.டிவில்லியர்சிடம் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது கூட உலகக்கோப்பையில் ஆடியே தீருவேன் என்று பிடிவாதமாகவே […]
பி.சி.சி.ஐ. மற்றும் அதிகாரிகளுக்கு 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் நடந்த முறைகேடுகளுக்காக அமலாக்கத்துறை ரூ.121 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் இந்த போட்டிகளில் உலகின் பல நாடுகளை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதுதான் உலக அளவில் அதிக செலவில் நடத்தப்படும் லீக் தொடராகும். 2009-ம் ஆண்டு நடந்த இந்த தொடரின் 2-வது சீசன், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தென்னாப்ரிக்காவில் […]
இந்திய வீரர் லெக் ஸ்பென்னர் கரண் சர்மா,2016-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை ஐபிஎல் சாம்பியன் வென்ற வெவ்வேறு அணிகளில் இடம் பெற்ற ஒரே வீரர் ஆவார். ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டதில் இருந்து ஒரே அணியில் இடம் பெற்ற வீரர்கள் சிலர் இருந்தாலும் அந்த அணி தொடர்ந்து மூன்று முறை பட்டம் வென்றதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிமட்டுமே தொடர்ந்து 2 முறை பட்டம் வென்றுள்ளது. வேறு எந்த அணியும் தொடர்ந்து பட்டம் வெல்லவில்லை. ஆனால், சாம்பியன் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ,சென்னைக்கு மீண்டும் ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தந்ததில் பெருமை அடைகிறோம் என்று கூறினார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பிறகு சிஎஸ்கே அணி களமிறங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. பிளே-ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் […]
ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷகீத் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அப்ரிடி விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாகும். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பிராத்வெயிட் கேப்டனாக உள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. […]