ஐபிஎல் தொடரில் ஆடும் அணிகளில் ஆட்டம் தொடர்பான விவகாரங்களில் உரிமையாளர்களின் தலையீடு இருப்பதை கவுதம் காம்பீர் விமர்சித்துள்ளார். இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத டெல்லி அணி, இந்த சீசனின் தொடக்கத்தில் காம்பீரின் தலைமையில் களம் கண்டது. கொல்கத்தா அணிக்கு இரண்டுமுறை கோப்பையை வென்று கொடுத்த வெற்றி கேப்டனான காம்பீரின் ஆட்டம் இந்த முறை எடுபடவில்லை. கேப்டனாகவும் வீரராகவும் சோபிக்காத காம்பீர், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு […]
இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், லார்ட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆண்டர்சன் அந்த டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளையே கைப்பற்றினார், பிராட் 1 விக்கெட்டைத்தான் கைப்பற்றினார். இதனையடுத்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், ஒன்று பிராட், இல்லையேல் ஆண்டர்சனை அணியிலிருந்து நீக்கி ஒரு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு முந்தைய இங்கிலாந்து தொடரிலும் கூட […]
பாகிஸ்தானின் ‘பூம் பூம்’ அதிரடி ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி லார்ட்ஸில் இன்று (மே 31) நடைபெறும் டி20 போட்டியில் உலக லெவன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் இங்கிலாந்து ஒருநாள் கேப்டன் இயன் மோர்கன் நியமிக்கப்பட்டிருந்தார், அவருக்குக் காயம் ஏற்படவே அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட ஷாகித் அப்ரீடிக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த காட்சி சர்வதேசப் போட்டி மூலம் கிடைக்கும் நிதி மே.இ.தீவுகளில் கிரிக்கெட் வளர்ச்சிக்கும், புயலால் பாதிக்கப்பட்ட ஸ்டேடியங்களை மறுகட்டுமானம் செய்யவும் பயன்படுத்தப்படவுள்ளது. […]
கிறிஸ் கெய்ல் பெரிய பெரிய சிக்சர்களுக்கும் சரவெடி டி20 இன்னிங்ஸ்களுக்கும்,சர்ச்சைகளுக்கும் புகழ் பெற்றவர். தன் வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்பவர் கெய்ல், அதனால் அவர் பேச்சும் வெளிப்படையாகவே இருக்கும், ஆனால் அது பல வேளைகளில் சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாக அமைந்து விடும். ஆஸ்திரேலியாவில் நடந்த 2016-ம் ஆண்டு பிக்பாஷ் டி20 லீகின் போது ஒரு போட்டியில் டிவி தொகுப்பாளினி மெல் மெக் லாஃப்லின் என்பவரை நோக்கி, “உங்கள் கண்களை முதல் முறையாகப் பார்க்கிறேன்” என்றும் “இந்தப் போட்டியில் வென்ற பிறகு உங்களுடன் […]
சர்வதேச கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்டில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அனில் கும்பளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி மும்பையில் நடைபெற்ற 2 நாள் ஆலோசனைக்குப் பின் கடுமையான விதிகளை பரிந்துரைத்துள்ளது. அண்மையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய புகாருக்கு ஆளாகியதையடுத்து பந்தை சேதப்படுத்துதல், சரியாக விளையாடாமல் இருத்தல் போன்றவற்றுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிநபர் வசைபாடுதல், தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]
சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2018 சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கியப் பங்களிப்பு செய்த நிலையில் ஊடகம் ஒன்றில் சில விரைவு கேள்விகளுகு சுறுசுறுவென பதில் அளித்தார். விரைவுக் கேள்விகளும் ரெய்னா பதில்களும் வருமாறு: யார் நல்ல என்டெர்டெய்னர்? – பிராவோ யார் லொடலொடவென பேசிக்கொண்டே இருப்பவர்- ஜடேஜா யார் அறுவை? – ஒருவரும் இல்லை யார் அதிகம் படிக்கக் கூடியவர்கள்: இந்திய வீரர் இல்லை எப்பவும் இயர்போனுடன் அலையும் வீர்ர்கள்: எல்லாரும்தான் அணியில் ஜோக்குகள் […]
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்,தென் ஆப்பிரிக்க அணி ஏபி டி வில்லியர்ஸை இழந்தது, இந்திய அணியில் விராட் கோலி இல்லாததற்குச் சமமாகும், இருவரின் இடத்தையும் யாராலும் நிரப்பமுடியாது என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவிப்பு வெளியிட்டார். 15 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய டிவில்லியர்ஸ் 8765 ரன்கள் சேர்த்துள்ளார். தென் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 7-ம் தேதி 11-வது ஐபிஎல் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டில் சென்னை அணி உற்சாகமாக களமிறங்கி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் […]
இலங்கை கிரிக்கெட் வாரியம் ,மேட்ச் ஃபிக்சிங்கிற்காக காலே மைதானத்தின் தன்மை மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படும் புகாரை நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளது. மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான அல் ஜசீரா ஆவண படத்தை தொடர்ந்து காலே மைதான அதிகாரி தரங்கா இண்டிகா, கிரிக்கெட் வீரர் மெண்டிஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரிய துணை தலைவர் மோகன் டி சில்வா, மைதானத்தின் தன்மை குறித்து அணியின் கேப்டன்களோ, நடுவர்களோ புகார் எதுவும் அளிக்கவில்லை என்று […]
ஆப்கானிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்,ஆஃப்கானிஸ்தானில் அதிபருக்கு அடுத்தபடியாக அதிகம் அறியப்படும் நபராக தாம் இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார். 19 வயது இளம் வீரரான ரஷீத் கான், ஐ.பி.எல். போட்டிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். அவரை சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்த நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரஷீத் கான், சச்சினின் ட்விட்டர் பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டதாக தெரிவித்தார். ஆஃப்கானிஸ்தானில் டெண்டுல்கர் அனைவருக்கும் பிடித்தமான வீரர் என்பதால், அவரது பாராட்டு […]
பிராவோ மற்றும் தோனிக்கு இடையே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான இறுதிப்போட்டிக்குப் பிறகு சுவாரஸ்யமான போட்டி நடந்துள்ளது. மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சனின் சிறப்பான ஆட்டத்தால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சூப்பர் வீரர்கள் மூன்றாவது மூறையாக கோப்பையை வென்றதால் மைதானத்தில் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தோனி மற்றும் பிராவோ […]
சென்னை விமான நிலையத்தில் 11-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று திரும்பிய சென்னை சூப் பர் கிங்ஸ் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டில் சென்னை அணி உற்சாகமாக களமிறங்கி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. […]
அதிக சதம் அடித்தவர், அதிக அரை சதம் அடித்தவர், சிக்ஸர், பவுண்டரிஅதிகமாக அடித்த வீரர், விக்கெட்டுகள், மெய்டன் எடுத்த பந்துவீச்சாளர் ஆகியோரின் விவரங்கள் 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் வந்துள்ளன. மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 51 ஆட்டங்களைக் கொண்ட 11-வதுசீசன் ஐபிஎல் போட்டியில் பல்வேறு சாதனைகளை வீரர்கள் படைத்துள்ளனர். அதிக […]
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நாட்டில் குழந்தைகள் மீதான பலாத்காரம் அதிகரித்துள்ளதற்கு மிகவும் வேதனை தெரிவித்துள்ள நிலையில், நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து, பலாத்காரம் என்றால் என்னப்பா என்று என் மகள் என்னிடம் கேட்டுவிடுவாளோ என பயமாக இருக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முன்னால் கேப்டனான கவுதம் கம்பீர் ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது,”பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருவதை நாளேடுகளில் அது […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், ஐதராபாத் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் ரசிகர்களின் பலத்த வரவேற்புகளுக்கு இடையே இன்று சென்னை வந்தடைந்தனர். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் இன்று மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு பெரும் திரளாக திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி வீரர்களை வரவேற்றனர். […]
மகாவெற்றியுடன் ஐபிஎல் 2018 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக முடிந்தது. தொடக்கப் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றிருந்ததையடுத்து வெற்றியுடன் தொடங்கி வெற்றிக்கோப்பையுடன் முடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதற்கு முக்கியக் காரணம் கேப்டன் தோனி, அவரது உறுதியும் அமைதியும் பெரிய அளவுக்கு வீரர்களுக்குப் பக்கபலமாக இருந்தது, அதன் உச்ச கட்டமாக வாட்சன் நேற்று வெளுத்துக் கட்டி சதம் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது வாட்சனுக்கு வழங்கப்பட்டது. இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் வேறு சில […]
நேற்று தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னொரு ஐபிஎல் மகுடத்தைச் சூடியது. சன் ரைசர்ஸ் அணியை சற்றும் எதிர்பாராதவிதமாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நொறுக்கியது சிஎஸ்கே. வாட்சன் ஆட்டத்தை ‘நோ-கான்டெஸ்ட்’ என்பார்களே அப்படிக் கொண்டு சென்றார். ரஷீத் கான் பவுலிங்குக்கு மரியாதை கொடுப்போம் என்ற முடிவு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கை கொடுத்தது. இந்நிலையில் ஆட்டம் முடிந்து தோனி கூறியதாவது: இறுதிப் போட்டிக்கு நுழைகிறோம் எனும்போதே அனைவரும் தங்கள் பங்கு என்னவென்பதை தெரிந்து வைத்திருந்தனர். பீல்டிங்கைத் தேர்வு […]
மும்பையில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்திய சென்னை அணி, 3 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதினர். ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 49 நாட்களில் 59 ஆட்டங்கள் முடிவடைந்தன. இன்றைய இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், சென்னை அணியும் மோதி வந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 […]