Pakistan vs India : ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சாதனை என்ன?

pakistan vs India

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கையில் பல்லெகலே மைதானத்தில் மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின் இரு அணிகளும் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் கடைசியாக இரு அணிகளும் 2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் விளையாடினார்கள். அதன் பிறகு தற்போது ஆசிய கோப்பை தொடரில் மோதுகின்றன.

இதனால் இப்போட்டியை காண இருநாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2023 ஆசியக் கோப்பையின் 3வது போட்டியில் இரு அணிகளும் ஒருவரையொருவர் எதிர்கொள்ள தயாராக உள்ள நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் சாதனை என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக 132 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 73 முறையும், இந்தியா 55 முறையும் வெற்றி பெற்றுள்ளது. நான்கு போட்டிகளில் எந்த முடிவும் இல்லை. இதுபோன்று, ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில், இரு அணிகளும் 13 முறை நேருக்கு நேர் மோதியதில், இந்தியா 7 முறையும், பாகிஸ்தான் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதனிடையே, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 3 வெற்றிகளை குவித்துள்ளது.

எனவே, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான், ஆசிய கோப்பை 2023 தொடரில் முதல் வெற்றியுடன் தொடங்கியது. முல்தானில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் நேபால் அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இன்று நடைபெறும் போட்டியில், இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் கடும் சவாலை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies