IPL2024: சாம் கரன் அதிரடி.. ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ..!

Published by
murugan

IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியானது குவஹாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில்  நடைபெற்றது. போட்டியில் டாஸ் என்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக மத்தியில் களம் இறங்கிய ரியான் பராக் 48 ரன்களும், அஸ்வின் 28 ரண்களும் எடுத்தனர். அதே நேரத்தில் பஞ்சாப் அணியில் சாம்கரண் , ஹர்ஷல் படேல் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டை பறித்தனர். அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் இருவரும் தலா ஒரு விக்கெட் பறித்தனர். பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக  பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.

முதல் ஓவரின் 4-வது பந்தியிலேயே பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களுக்கு விக்கெட் இழந்தார். அடுத்து ரிலீ ரோசோவ் களமிறங்க நிதானமாக விளையாடி 22 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஷஷாங்க் சிங் டக் அவுட் ஆகி நடையை காட்டினார். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு தொடக்க வீரரான  ஜானி பேர்ஸ்டோவ் 22 பந்தில் வெறும் 14 ரன் எடுத்து விக்கெட் இழந்தார்.

பின்னர் சரிவில் இருந்த அணியை ஜிதேஷ் சர்மா, சாம் கரண் இருவரும் நிதானமாக விளையாடி மீட்டு கொண்டு வந்தனர். இருப்பினும் இவர்களின் கூட்டணி நீண்ட நேரம் நிலைக்கவில்லை 22 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடிக்க முயன்ற ஜிதேஷ் சர்மா யுஸ்வேந்திர சாஹலிடம் தனது கேட்சை கொடுத்தார். இருந்தபோதிலும் கேப்டன் சாம் கரண் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் 63* ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இறுதியாக பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 13 போட்டிகள் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது.

ராஜஸ்தான் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியை ஏற்கனவே இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கோவா கோயில் துயரம்.. முதல்வர் பிரமோத் சாவந்த் நேரில் ஆய்வு.!

கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…

41 minutes ago

வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று பெங்களூருடன் மோதல்.!

பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…

1 hour ago

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

2 hours ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

2 hours ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

10 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

12 hours ago