MI PBKS Tweet [ImageSource- Tweet/@IPL]
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதையடுத்து, மும்பை அணி, பஞ்சாப் அணியின் ட்ரோல்-க்கு ட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்று மொகாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து அதிரடியாக விளையாடி 214 ரன்கள் குவித்தது. இதனையடுத்து மிகப்பெரிய இலக்கை துரத்திய மும்பை அணி இஷான் கிஷன், சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து எளிதாக இலக்கை அடைந்தது.
இந்த வெற்றிக்கு பிறகு மும்பை அணி, தனது ட்விட்டரில் அனைத்து காவல்துறைக்கும் என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். முன்னதாக மும்பை-பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் மும்பை அணியின் விக்கெட்களை இருமுறை ஸ்டம்ப்களை உடைத்து வீழ்த்தினார்.
அப்போது பஞ்சாப் அணி தனது ட்வீட்டில், ஸ்டம்ப்களை உடைத்ததற்கு மும்பை காவல்துறையிடம் நாங்கள் ஒரு குற்றத்தை பதிவு செய்ய விரும்புகிறோம் என்று கேலியாக பதிவிட்டிருந்தனர், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பை அணி நேற்றைய வெற்றிக்கு பிறகு ‘அனைத்து காவல்துறைக்கும் ஒரு பதிவு, என ட்வீட் செய்துள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இங்கு குற்றம் பதிவு செய்யும் அளவுக்கு எதுவும் நிகழவில்லை, நாங்கள் இங்கே மொகாலியில் கிரிக்கெட் விளையாட வந்து, ஒரு அணியை வீழ்த்தியுள்ளோம். உங்களுக்கு வேறு முக்கியமான வேலை இருக்கும், உங்களது சேவைக்கும் அது எப்போதும் தொடரவேண்டும் எனவும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளது.<
/p>
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…