தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் ஹைதராபாத்.. ரஷீத் கானின் மேஜிக் பந்துவீச்சை சமாளிக்குமா ராயல்ஸ்?

Default Image

13 ஆம் ஐபிஎல் தொடரில் 40 ஆம் போட்டியான இன்று, ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 40 ஆம் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ஹைதராபாத் அணி 6 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் 6 ஆம் இடத்தில் உள்ளது. அதனைதொடர்ந்து ஹைதராபாத் அணி, 9 போட்டிகளில் ஆடி 3-ல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் 7 ஆம் இடத்தில் உள்ளது.

புள்ளிப் பட்டியலில் முன்னுக்கு வரவும், பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி பெற்று வரும் நிலையில், இன்றைய போட்டி அனல்பறக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் அணியில் பேட்டிங்கை பொறுத்தளவில், முதல் மற்றும் மீடில் ஆர்டர் வலுவாக இருக்கிறது. பவுலர்கழும் நல்ல பார்மில் இருந்து வரும் நிலையில், ரஷீத் கானின் மேஜிக் பந்துவீச்சு, அணிக்கு கூடுதல் பலம்.

ராஜஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரை பொறுத்தளவில், சற்று ஸ்லொவாக இருக்கின்றனர். மீடில் ஆர்டர் பேட்ஸ்மன் சிறப்பாக ஆடிவருவதும், ஆர்ச்சரின் மின்னல் வேக பந்துவீச்சும் அந்த அணிக்கு கூடுதல் பலம். இவ்விரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாக கருதப்படுவதால், இன்றைய போட்டி சிறப்பாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்