இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவாரை பிசிசிஐ நியமித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி இந்திய மகளிர் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியது. இதற்கு 35 பேர் அதற்காக 35 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன.
சுலக்ஷனா நாயக், மதன் லால் மற்றும் ருத்ரா பிரதாப் சிங் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு நேர்காணல் செய்து ரமேஷ் பவாரை இந்திய மகளிர் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளராக ஒருமனதாக தேர்வு செய்தனர்.
இந்தியாவுக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பவார், இதற்கு முன்பு ஜூலை 2018 முதல் நவம்பர் 2018 வரை பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். இந்திய அணி 2018 -ஆம் ஆண்டு ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைந்தது.
மேலும், தொடர்ச்சியாக 14 டி20 சர்வதேச போட்டிகளிலும் வென்றது. 2018 -ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி போட்டியின் போது பயிற்சியாளர் ரமேஷ் பவாருக்கும், மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் இடையே மோதல் ஏற்பட்டது. போட்டி முடிவடைந்த பிறகு ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் விஜய் ஹசாரே டிராபியை வென்ற மும்பை அணியின் பயிற்சியாளராகவும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பவார் செயல்பட்டுள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…