ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – டூ பிளேஸிஸ் களமிறங்கினார்கள்.
முதல் ஓவரிலே அதிரடியாக ஆடிய விராட் கோலி 9 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து பட்டிதார் களமிறங்க, பிளேஸிசுடன் இணைந்து சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 23 ரன்கள் அடித்து டூ பிளேஸிஸ் தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட் ஆக, மறுமுனையில் இருந்த பட்டிதார் 16 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இறுதியாக பெங்களூர் அணி, 19.3 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதிரடியாக பந்துவீசிய குல்தீப் சென் தலா 4 விக்கெட்களும், அஸ்வின் தலா 3 விக்கெட்களும், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்கள்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…