IPL Auction [file image]
IPL Auction : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் ரிடெயின் செய்யும் வீரர்களை அதிகரிக்க வேண்டும் பிசிசிஐக்கு சில ஐபிஎல் அணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன் அதற்கான மினி ஏலம், மெகா ஏலம், டிரேடிங் போன்ற நிகழ்வுகளின் படி அணியில் வீரர்களை எடுப்பார்கள். அதிலும் மெகா ஏலம் என்றால் அந்த ஆண்டின் ஐபிஎல் ஏலம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு அப்படி பட்ட மெகா ஏலம் இந்த வருடத்தின் கடைசியில் நடைபெற உள்ளது.
கடந்த 2022 ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் ஒரு ஐபிஎல் அணியில் நான்கு வீரர்களைத் தக்கவைத்து (Retain) கொள்ள ஏலத்தின் விதிப்படி அனுமதிக்கப்பட்டது. மேலும், ஒரு வீரரை ‘ரைட் டு மேட்ச்’ (ஆர்டிஎம்) என்ற அட்டையைப் பயன்படுத்தி திரும்ப வாங்கலாம். இந்த விதி ஒரு அணியில் மொத்தம் ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்ளும் வாய்ப்பை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது, இதில் அதிகபட்சமாக ஒரு ஐபிர்கள் அணிகள் இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.
தற்போது, இதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று சில ஐபிஎல் அணிகள் பிசிசிஐயிடம் வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்ன மாற்றம் என்றால் ஒரு அணியில் ஐந்து வீரர்களை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி ஒரு அணியில் 8 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற நிலை வர வேண்டும் என்பது தான். நடைபெற்று கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் இளம் வீரர்களின் ஆதிக்கம் நன்றாகவே செயல்பட்டு வருகிறது.
இதனால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் அந்த வீரர்களை தக்க வைப்பதற்காக இந்த தீர்மானத்தை செய்ய வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று தகவல்கள் தெரிந்துள்ளது. இதனால் அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு நடைபெற இருக்கும் ஏலத்தில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்பதை பிசிசிஐ அதிகார பூர்வமாக அறிவித்தால் தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…