INDvENG: பந்த் தலையில் அடித்த ரோஹித்.. காரணம் என்ன தெரியுமா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளன்று இங்கிலாந்து அணி வீரர் ஓலி ஸ்டோனின் விக்கெட்டை வீழ்த்தியபோது ரோஹித் ஷர்மா, உற்சாகத்தில் ரிஷப் பந்தின் தலையில் தட்டினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. இன்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 53 ரன்கள் எடுத்தது. மேலும், 429 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நாளைய ஆட்டத்தை தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்தின் தலையில் அடிக்கும் காட்சிகள், சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்து அணி வீரர் ஓலி ஸ்டோனின் விக்கெட்டை வீழ்த்தியபோது ரோஹித் ஷர்மா, உற்சாகத்தில் ரிஷப் பந்தின் தலையில் தட்டினார். தற்பொழுது அந்த காட்சிகள், சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இங்கிலாந்து அணி, 429 ரன்கள் அடித்தால் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025