விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை – எல் முருகன்

BJP state president L Murugan has said that talks on block allocation will be held soon.

விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், பாஜக – அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேரவையில் இடம் பெறுவார்கள். அனைத்து மாவட்ட மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.