உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி , நியூஸிலாந்து அணியுடன் அரையிறுதி போட்டியில் தோல்விடைந்து வெளியேறியது.அதன் பிறகு அணியில் பிரச்சனை உள்ளதாக கூறப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் கேப்டன் கோலி ரோஹித் ஷர்மாவின் கருத்துக்களை கேட்கவில்லை எனவும் அதனால் இந்திய அணி இரண்டு குரூப்பாக பிரிந்ததாக கூறப்பட்டது.
மேலும் குறுகிய ஓவர் போட்டிகளில் கேப்டன் கோலி நீக்கிவிட்டு ரோஹித் ஷர்மாவை நியமிப்பதாக தகவல் வெளியானது.ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட உள்ள அனைத்து போட்டிகளுக்கும் கோலி கேப்டன் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கும் ,ரோஹித் ஷர்மாவிற்கும் எந்தவிதமான பிரச்சனை இல்லை எனவும் இப்படி சொல்லுபவர்களுக்கு என்ன லாபம் வரப்போகிறது என்று தெரியவில்லை என கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி உடன் விளையாட உள்ள தொடருக்காக இந்திய அணி மியாமி செல்லும் முன் கோலி ஒரு புகைப்படத்தை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.அந்த புகைப்படத்தில் ரோஹித் ஷர்மா இல்லை இதனால் ரசிகர்கள் ரோஹித் ஷர்மா எங்கே ?அப்போது உங்களுக்குள் இருக்கும் பிரச்சனை உண்மைதான் என கருத்துக்கள் பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் விராட் கோலி ஒரு புகைப்படத்தை பதிவிட்டார்.அந்த புகைப்படத்தில் ரோஹித் ஷர்மா இல்லை அதனால் மீண்டும் ரசிகர்கள் ரோஹித் ஷர்மா எங்கே ? கேட்க தொடக்கி உள்ளனர்.
அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு புகைப்படத்தை வெளியிடுள்ளார்.அதில் ரோஹித் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான் , ரிஷாப் பந்த் ஆகியோர் இருந்தனர்.ஆனால் அதில் விராட் கோலி இல்லை இதனால் இந்திய அணியில் பிளவு இருப்பது உண்மை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…