PBKS VS MI [ImageSource- Twitter @PunjabKingsIPL]
ருத்ர தாண்டவம் ஆடிய லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜிதேஷ் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 215 ரன்கள் இலக்கு.
ஐபிஎல் தொடரின் இன்றைய 46-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் IS பிந்த்ரா மைதானத்தில் மோதுகின்றன.டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னிற்கு ஆட்டமிழந்து சற்று ஏமாற்றத்தை தந்தார்.
ஷிகர் தவான் நிதானமாக விளையாடி 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து அட்டமிழக்க,மத்தேயு ஷார்ட் தனது பங்கிற்கு 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும்.
லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை புயல் வேகத்தில் உயர்த்தினர்.இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் மும்பை பந்துவீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் சிதறடித்தனர்.
லியாம் லிவிங்ஸ்டோன் 82 ரன்களுடன் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் உடனும் மற்றும் ஜிதேஷ் சர்மா 49 ரன்களுடன் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உடன் களத்தில் இருந்தனர்.இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை எடுத்துள்ளது.
பியூஷ் சாவ்லா 2 விக்கெட்களையும் அர்ஷத் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 56 ரன்களை அதிகபட்சமாக கொடுத்தார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…