300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? என்பதை புகைப்படத்தைக் காட்டி ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கினார்.

Sofia Qureshi

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து வந்தன. இந்நிலையில், இதுவரையிலான நிலவரம் என்ன? என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? உள்ளிட்ட களநிலவரங்கள் தொடர்பாக நம் வெளியுறவு செயலர் மற்றும் ராணுவ அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் புகைப்படத்தைக் காட்டி விளக்கிய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, ”எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. நேற்று இரவு இந்தியாவின் 26 நிலைகளை குறி வைத்து தாக்க முயன்றது. ஆனால் பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.

மேலும், பாகிஸ்தான் தரப்பு 300 முதல் 400 ட்ரோன் விமானங்களை பயன்படுத்தி தாக்க முயற்சி பாகிஸ்தான் ராணுவம் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது. கனரக ஆயுதங்களை பயன்படுத்தி ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது.

குறிப்பாக, இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறையை சோதிக்கவும், உளவுத் தகவல் சேகரிக்கவுமே ட்ரோன்களை பாகிஸ்தான் அனுப்பியதாகவும் குறிப்பிட்ட அவர், துருக்கியின் டிரோன்களை கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்