நடப்பு உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் 36 லீக் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் குவித்தது. கடைசிவரை களத்தில் கோலி 101* ரன்களுடனும் , ஜடேஜா 29 ரன்களுடனும் இருந்தனர்.
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 27.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 83 ரன்கள் எடுத்து 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்டையும் ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டையும், சிராஜ் 1 விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் நடப்பு உலக்கோப்பையில் விளையாடிய 8 போட்டியிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிரடி வீரர் கிங் கோலி முக்கிய பங்கு உள்ளது. அதே நேரத்தில் இன்றைய போட்டி கோலி வாழ்க்கையில் மறக்க முடியதாக போட்டியாக அமைந்துள்ளது. காரணம் இந்தியாவின் ரன் மெஷின் என்று கூறப்படும் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 49-வது சதத்தை அடித்தார். இதனால் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். இன்றைய போட்டியில் 49-வது ஓவரில் ரபாடா வீசிய மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்து டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். இந்த சாதனையை கோலி தனது 35-வது பிறந்தநாளில் செய்துள்ளார்.
சச்சின் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 463 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 452 இன்னிங்ஸ்களில் 18426 ரன்கள் எடுத்தார். அதில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடித்துள்ளார். விராட் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 288 போட்டிகளில் விளையாடி 277-வது இன்னிங்சில் 18426 ரன்கள் அடித்துள்ளார். அதில் 49 சதங்களும், 70 அரை சதங்களும் அடித்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்களை விளாசியவர் என்ற தன்னுடைய சாதனையை சமன் செய்த விராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்தார். அவர் எக்ஸ் ட்விட்டரில், “விராட் நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். 49 இல் இருந்து 50 அடைவதற்கு (வயதை கூறினார்) எனக்கு 365 நாட்கள் ஆனது. அடுத்த சில நாட்களில் நீங்கள் 49-ல் இருந்து 50-ஐ எட்டி எனது சாதனையை முறியடிப்பீர்கள் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்.” என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…