ஐபிஎல்2020 போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.அணிகள் கோப்பையை கைப்பற்ற போட்டிப் போட்டுக்கொண்டு முன்னேறி வருகின்றது.இதில் சென்னை அணி மட்டுமே பின் தங்கி விளையாடி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பென் ஸ்டோக்ஸின் ஆட்டமிழக்காத 60 பந்து 107 மற்றும் சஞ்சு சாம்சனின் ஆட்டமிழக்காத 50ரன்கள் ஆகியவற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியால் சிஎஸ்கேவை புள்ளிகள் பட்டியலில் தள்ளி ஐபிஎல் 2020 பிளேஆஃப் சுற்றி தட்டிச் சென்றது.
எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை அணி ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக பிளேஆஃப்பை இழந்ததுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடங்கப்பட்டதிலிருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே-ஆஃப் அல்லது நாக் அவுட் கட்டங்களை அடைய முடிந்தது.
தடை முடிந்து 2018 ஆம் ஆண்டில் சென்னை திரும்பி வந்ததும், 2019 ல் இறுதிப் போட்டியில் களம்கண்டது, சிஎஸ்கே பலவாய்ந்த அணியாக மற்ற அணிகளுக்கு சவாலாகவே இருந்து வந்தது.
ஆனால் நடப்பாண்டு ஐ.பி.எல் 2020 பிளேஆப் சுற்றில் இருந்து நாக் அவுட் ஆன முதல் அணியாக சி.எஸ்.கே வெளியேறுகிறது.சென்னை ரசிகர்களுக்கு இவ்வாண்டு மிகுந்த வேதனை ஆண்டாகவே இருந்திருக்கும்.
இந்நிலையில் இது குறித்து தோனியின் மனைவி சாக்ஸி இது ஒரு விளையாட்டு..நீங்கள் சிலவற்றை வென்றால் சிலவற்றை
இழக்கிறீர்கள்.
பல வருடங்கள் மயக்கும் பல வெற்றிகளுக்கும் சில வேதனையான தோல்விகளுக்கும் சாட்சி! ஒன்றைக் கொண்டாடுவதும்,மற்றொன்று மனம் உடைந்து போவதும் !! ”என்று தனது சாக்ஷி இன்ஸ்டாகிராமிலும்,ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் இது ஒரு விளையாட்டு! யாரும் தோற்றுப்போக விரும்பமாட்டார்கள், ஆனால் அனைவரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது அவர்கள் எப்போதும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸ் ஆக இருப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சாக்ஷியின் பதிவுகளை சி.எஸ்.கே.யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இது ஒரு விளையாட்டு …என்ற கவிதையை அவர்களின் காலவரிசையில் பதிவிட்டுள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…