LKK Won [Image source : Twitter/@TNPremierLeague]
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய SLST vs LKK போட்டியில், கோவை கிங்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய கோவை அணி வீரர்கள் அதிரடி காட்டி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். அதன்பின், 200 ரன்கள் என்ற இலக்கில் சேலம் அணியில் முதலில் சாத்விக் மற்றும் ஹரிஹரன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இதில் சாத்விக் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அதன் பிறகு களமிறங்கிய கௌஷிக் காந்தி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, மான் பாஃப்னா மற்றும் எஸ் அபிஷிக் ஓரளவு ரன்கள் எடுத்து தங்களது விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின், சன்னி சந்து நிதானமாக விளையாடி 29 ரன்கள் எடுத்து ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய முஹம்மது அட்னான் கான் 20 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதன்பின் களமிறங்கிய சேலம் அணி வீரர்கள் கோவை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.
முடிவில், சேலம் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லைகா கோவை கிங்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோவை அணியில் தாமரை கண்ணன் 3 விக்கெட்டுகளையும், ஷாருக் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…
டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…