ஸ்காட்லாந்து பந்து வீச்சை துவம்சம் செய்து.. இங்கிலாந்து அபார வெற்றி ..!

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை (ICC Under 19 World Cup 2024) கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி இன்று இங்கிலாந்துக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையே நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து முதலில்  பேட்டிங் செய்தது ஸ்காட்லாந்து அணி 49.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்து வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

INDvsBAN :முதலில் பேட்டிங் செய்த இந்தியா 251 ரன்கள் குவிப்பு!

 அதிகபட்சமாக ஸ்காட்லாந்து அணி வீரர்களான ஜேமி டங்க் 41 ரன்களும், ஓவன் கோல்ட் 48 ரன்களும் எடுத்தனர்.  இங்கிலாந்து அணி சார்பாக ஃபர்ஹான் அகமது மற்றும் லக் பென்கன்ஸ்டைன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதை தொடர்ந்து 175 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 26.2 ஓவர்களில் 178 ரன்களை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் தங்களது உலகக்கோப்பை பயணத்தை தொடங்கினர்.

அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் ஜெய்டன் டென்லி 40 ரன்களும், பென் மெக்கின்னி 88 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்த வீரர்கள் மீதம் இருந்த ரன்களை எட்டி அணியை வெற்றி பெற செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies