கேப்டன் விராட் கோலி ஆகியோரின் மகளான ஒன்பது மாத குழந்தை வமிகாவுக்கு பாலியல் மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து வரும் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பிறகு ஆன்லைனில் சர்ச்சைக்குள்ளான அணி வீரர் முகமது ஷமிக்கு ஆதரவாக பேசியதற்காக கேப்டன் கோலி கடுமையான ட்ரோலை எதிர்கொண்டார்.
இரு அணிகளுக்கிடையிலான போட்டி முடிவடைந்த உடனேயே 3.5 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக்கொடுத்ததற்காக ஷமி தனது மதத்தின் காரணமாக கடுமையான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் மோசமான ஆன்லைன் ட்ரோலிங் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளானார். ஷமியின் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்கிய ட்ரோல்களை கடுமையாக விமர்சித்து கோலி கூறியதாவது:
“என்னைப் பொறுத்தவரை, ஒருவரை அவர்களின் மதத்தின் மீது தாக்குவது ஒரு மனிதன் செய்யக்கூடிய மிகவும் பரிதாபமான விஷயம். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் நான் ஒருபோதும் பாரபட்சம் காட்ட நினைத்ததில்லை.மதம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் தனிப்பட்ட மற்றும் புனிதமான விஷயம், அதை அங்கேயே விட்டுவிட வேண்டும்.தனிநபர்களாக நாம் என்ன செய்கிறோம், களத்தில் எவ்வளவு முயற்சி செய்கிறோம் என்பது பற்றிய புரிதல் இல்லாததால் மக்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளியே எடுக்கிறார்கள்”,என்று கூறினார்.
இந்நிலையில்,பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோரின் மகளான ஒன்பது மாத குழந்தை வமிகாவுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது நீக்கப்பட்ட @Criccrazyygirl என்ற கணக்கிலிருந்து விராட்டின் குழந்தை வமிகாவுக்கு பாலியல் மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,பாலியல் அச்சுறுத்தலை ட்வீட் செய்த நபரின் அடையாளம் இன்னும் முழுமையாக சரிபார்க்கப்படவில்லை.
காட்டுமிராண்டித்தனமான இத்தகைய ட்வீட்டிற்குப் பிறகு, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் உட்பட பலர், கோலியின் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும்,நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கோலியின் மகளை மிரட்டியவர்கள் இருப்பதைக் கண்டு மிகவும் வேதனையடைந்ததாக இன்சமாம் கூறினார்.மேலும்,அவர் கூறுகையில்,
“விராட் கோலியின் மகளுக்கு மிரட்டல்கள் வருவதாக கேள்விப்பட்டேன். இது வெறும் விளையாட்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடலாம், ஆனால் நாங்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோலியின் பேட்டிங் அல்லது அவரது கேப்டன்ஷிப்பை விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், கிரிக்கெட் வீரரின் குடும்பத்தை குறிவைக்க யாருக்கும் உரிமை இல்லை. வெற்றி தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி. கோலியின் குடும்பத்தை மக்கள் தாக்குவதைப் பார்த்து நான் மிகவும் வேதனையடைந்தேன்,” என்று இன்சமாம் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக,அக்டோபரில் ஐபிஎல் 2020 இன் போது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஐந்து வயது மகள் ஜிவாவுக்கு,பாலியல் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…