இந்திய அணிக்காக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து மூன்றாவது அரை சதத்தை அடித்து சாதனை படைத்தார். டி20 போட்டியில் இந்தியா 12வது தொடர் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் 5 ரன்னில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை விக்கெட்டை துஷ்மந்த சமிரா வீழ்த்தினார். டி20 போட்டியில் ரோஹித்தின் விக்கெட்டை 6 முறையாக சமிரா வீழ்த்தியுள்ளார். சஞ்சு சாம்சன் (18), தீபக் ஹூடா (21) , வெங்கடேஷ் அய்யர் (5) ரன்னில் விக்கெட்டை இழந்தனர்.
2 -வது போட்டி போல நேற்றைய போட்டியிலும் கடைசிவரை விளையாடி ஸ்ரேயாஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். ஷ்ரேயாஸ் 45 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கைக்கு எதிரான தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு சாதனை படைத்தது.
டுவென்டி 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா அணிகள் தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று உலக சாதனையை இந்திய அணி நேற்று சமன் செய்துள்ளது. இந்நிலையில், விராட் கோலிக்குப் பிறகு டுவென்டி 20 தொடரில் தொடர்ச்சியாக மூன்று 50 ரன்கள் எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் பெற்றார்.
விராட் 2012 (இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக), 2014 (தென்னாப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்துக்கு எதிராக) மற்றும் 2016 (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) மூன்று தொடர்ச்சியான போட்டிகளில் 50 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 174.35 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இலங்கைக்கு எதிரான தொடரில் ஆட்டமிழக்காமல் 204 ரன்கள் எடுத்தார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஸ்ரேயாஸ் 57 *, 74 * மற்றும் 73 * எடுத்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 200 ரன்கள் எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2016-ஆம் ஆண்டு 199 ரன்கள் எடுத்த விராட்டின் சாதனையை ஸ்ரேயாஸ் முறியடித்தார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் உலகின் மூன்றாவது பேட்ஸ்மேன் ஆனார். முன்னதாக, டேவிட் வார்னர் 2019 இல் இலங்கைக்கு எதிராக 217 * ரன்களும், ஆப்கானிஸ்தானின் நஜிபுல்லா சத்ரான் 2016 இல் UAE க்கு எதிராக 104 * ரன்களும் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…