இந்தியாவுடன் மோதப்போவது யார்.? ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்.!

Published by
செந்தில்குமார்

நடப்பாண்டுக்காண ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடரின் அரையிறுதி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியானது, நேற்று (15.11.2023) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து அணி, இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.

இதனால் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதிப் போட்டியானது இன்று நடைபெற உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் மோதுகிறது.

சொந்தமண்ணில் பழிக்கு பழி … இறுதிப்போட்டிக்கு சென்ற இந்தியா..!

இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா லீக்கில் விளையாடிய 9 போட்டிக்களில் 7-ல் வெற்றி பெற்றுள்ளது. தனது பேட்டிங் திறமையால் 1.261 ரன் ரேட் உடன் 14 புள்ளிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதேபோல பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணி 7 லீக் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் 14 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் (0.841) ஆஸ்திரேலியா அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதிய லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்புத் தொடர் முழுவதிலும் தென்னாப்பிரிக்கா 300 முதல் 400க்கும் அதிகமான ரன்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது.

அதோடு தென்னாப்பிரிக்கா இதுவரை வெற்றி பெற்ற போட்டிகளில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியுள்ளது. உலக கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்கா அணி இதுவரை 4 முறை அரையிறுதிக்குச் சென்றுள்ளது. அந்த நான்கு போட்டிலும் தோல்வியை சந்தித்து வெளியேறிய நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.

உலக சாதனையை முறியடித்த விராட்… பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்…!

இதுவரை 5 முறை உலக கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, அடுத்தடுத்து விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதுவரை, ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரண்டு அணிகளுமே 3 முறை வெற்றியடைந்துள்ளன. ஒரு போட்டி டை ஆனது.

இந்த தொடரில் தென்னாப்பிரிக்காவின் ஃபார்மைப் பார்க்கையில் இந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதற்கு வாய்ப்புகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும், இந்த இரு அணிகளுக்கும் இடையே போட்டி எளிதாக இருக்காது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 19ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும். எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்று எந்த அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

5 minutes ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

21 minutes ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

1 hour ago

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…

2 hours ago

5-வது டெஸ்ட் போட்டி.., டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…

2 hours ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து ஓபிஎஸ் ஓபன் டாக்.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…

3 hours ago