ஐபிஎல் தொடரில் பிளே -ஆப்ஸ் சுற்றுக்கு 4 ஆம் அணியாக, ஹைதராபாத் தகுதி பெற்றது.
ஐபிஎல் தொடர் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஹைதராபாத் – மும்பை அணிகள் மோதியது. இந்த போட்டி, ஷார்ஜாவில் நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்தது.
150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் – விருத்திமன் சஹா களமிறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிவந்த நிலையில், இருவரும் அரைசதம் விளாசினார்கள். இறுதியாக ஹைதராபாத் அணி, 17.1 ஓவரில் 151 ரன்கள் குவித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் ஹைதராபாத் அணி, பிளே -ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனைதொடர்ந்து முதல் பிளே -ஆப்ஸ் சுற்று, மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் வரும் 5 ஆம் மோதவுள்ளது, குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…