#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..!

Published by
murugan

இலங்கை அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.

இந்தியா, இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி இன்று ஆர்.பிரமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தனர்.

முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், 133 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா இருவரும் களமிறங்கினர். 3 வது ஓவரில் அவிஷ்கா புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை ராகுல் சஹாரிடம் கேட்சை கொடுத்து வெளியேறினார்.

பின்னர், களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா 8, தசுன் ஷானகா 3 ரன் எடுத்து நடையை காட்டினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மினோட் பானுகா  36 ரன்னில் ராகுல் சஹாரிடம் கேட்சை கொடுத்தார். அடுத்து இறங்கிய வாணிந்து ஹசரங்கா 15 , ரமேஷ் மெண்டிஸ் 2 ரன் எடுக்க தனஞ்சய டி சில்வா கடைசிவரை சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தார்.

இறுதியாக இலங்கை அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். களத்தில் தனஞ்சய டி சில்வா 40 * ரன்களுடன் இருந்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 2,  புவனேஷ்வர் குமார், ராகுல் சஹார், சேதன் சாகரியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டை பறித்தனர்.  நடந்து முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளனர்.

Published by
murugan
Tags: SLvIND

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

8 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

10 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

14 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

15 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

17 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

17 hours ago