KL Rahul [Image source : © BCCI/Sportzpics ]
இந்திய கிரிக்கெட் வீரரும், லக்னோ அணியின் கேப்டனுமான கே. எல். ராகுல் வலது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனும் நிலை ஏற்பட்டதால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் விலகினார்.
இதனையடுத்து, தற்போது வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாகவும், தான் விரைவில் களத்திற்கு திரும்புவேன் என கே. எல். ராகுல் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியதாவது ” அனைவருக்கும் வணக்கம், நான் எனது அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டேன். அது வெற்றிகரமாக முடிந்தது. தொடர்ந்து உதவி செய்த மருத்துவர்களுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு ஒரு பெரிய நன்றி. மீண்டும் களத்திற்கு திரும்புவதில் உறுதியாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக தனது அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக பீல்டிங் செய்யும்போது தொடையில் அவருக்கு காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…