இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணி இடையிலான இரண்டாவது டி 20 போட்டி இன்று புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , ஷிகர் தவான் இருவரும் களம் இறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலிருந்து நிதானமாக விளையாடிய இருவரும் அணியின் ரன்களை உயர்த்தினர்.
பின்னர் ஷிகர் தவான் 23 ரன்களில் வெளியேறினார். பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரைசதம் நிறைவு செய்து 67 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியாக இந்திய அணி 5 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓஷேன் தாமஸ் ,ஷெல்டன் கோட்ரெல் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 168 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.தொடக்க வீரர்களாக எவின் லூயிஸ், சுனில் நரைன் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே எவின் லூயிஸ் ரன் எடுக்காமல் வெளியேறினர். இதை தொடர்ந்து சுனில் நரைனும் 4 ரன்னில் வெளியேறினர்.
பின்னர் இறங்கிய நிக்கோலஸ் பூரன் ,ரோவ்மன் பவல் இருவரின் நிதானமான ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.சிறப்பாக விளையாடிய ரோவ்மன் பவல் 54 ரன்கள் அடித்தார்.
இந்நிலையில் 15.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் அடித்து இருந்தனர்.அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தினர். ஆனால் மழை நிற்காததால் டக்வொர்த் முறைப்படி இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…