பெங்களூர் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரைநடைபெறவுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின் போது தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பந்து வீச்சில் கைவிரலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அவர் நாடு திரும்பினார்.
இந்நிலையில், இன்னும் வாஷிங்டன் சுந்தர் தனது விரல் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலக்கப்பட்டுள்ளார். வங்காளத்தைச் சேர்ந்த ஆகாஷ் தீப் பெங்களூர் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பெங்களூர் அணி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…