தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசினார்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 578 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடங்க வீரர்களாக இறங்கிய சுப்மான் கில் 29, ரோகித் 6 ரன்களுடன் வெளியேறினார். பின்னர், இறங்கிய துணை கேப்டன் ரஹானே 1 , கேப்டன் கோலி 11 ரன்கள் எடுத்து பெவிலியன் திருப்பினார்கள். இதனால், சரிவில் இருந்த இந்திய அணியை புஜாரா மற்றும் பண்ட் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ரன்னை சற்று உயர்த்தினார்கள்.
புஜாரா ஒரு புறம் பொறுமையாக விளையாட மறுபுறம் பண்ட் அதிரடியாக விளையாடினார். ஆனால் ஒரு கட்டத்தில் புஜாரா 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழந்து சென்ற சிறிது நேரத்தில் அதிரடியாக விளையாடிய பண்ட் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் எடுத்தநிலையில், இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. களத்தில் சிறப்பாக விளையாடி வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் விளாசினார். தற்போது, 64* ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். அதில் 11 பவுண்டரி அடங்கும். இந்திய அணி 7 விக்கெட்டை இழந்து 312 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், இங்கிலாந்து அணி 266 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…