தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வரும் நிலையில் தோனியின் மனைவி ஷாக்சியின் இன்ஸ்டாகிராமில் அவர்களது 5 வயது மகளான ஷிவா தோனிக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் வகையில் மர்ம நபர் கமெண்ட் செய்தார் .இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.எனவே இது தொடர்பாக ராஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே இது தொடர்பாக குஜராத்தின் கட்ச் பகுதியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். கமெண்ட் செய்தது அவர்தான் என ஒப்புக்கொண்டார் என்று கட்ச் காவல் கண்காணிப்பாளர் சவுரப் சிங் கூறியுள்ளார்.”ராஞ்சி போலீஸ் வந்த பிறகு சிறுவனை அவர்களிடம் ஒப்படைப்போம்” என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது விறுவிறுப்பாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனை பொறுத்தவரை 3 முறை கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்காக தடுமாறி வருகிறது.சென்னை அணியை பொறுத்தவரை இந்த சீசனில் மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 2 வெற்றிகள் ,5 தோல்விகள் அடங்கும். விளையாடிய போட்டிகளில் சென்னை அணி வெற்றியின் விளிம்பு வரை வந்து தோல்வி அடைந்துள்ளது.இதனால் ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.குறிப்பாக சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சரி இல்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து வருகின்றனர்.இதன் விளைவாக சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…