ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரரான டேவிட் வார்னர் 61ரன்கள் எடுத்தார். பின்னர் மத்தியில் களமிறங்கிய மார்னஸ் 74 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நேற்றைய ஆட்ட முடிவில் 52.1 ஓவரில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது.ஆர்ச்சர் 6 விக்கெட்டை பறித்தார்.
இன்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆடும் தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இங்கிலாந்து அணி 27.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ டென்லி 12 ரன்கள் குவித்தார்.
இதற்கு முன்பு 1948-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதன் பின்னர் தற்போது குறைந்த ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…