நீல நிறம் ஜெர்ஸி தான் இந்திய அணியின் ஜெர்ஸி ! அது தான் பெருமை -விராட் கோலி !

இன்றைய பல பரீட்சையில் இங்கிலாந்து அணி , இந்திய அணி மோதுகிறது.இப்போட்டியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொங்க உள்ளது. இந்திய அணி இன்றைய போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது.
நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை பற்றி பேசிய கோலி “இந்த வண்ணம் கொண்ட ஜெர்ஸி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.இந்த ஜெர்ஸி ஒருநாள் மட்டுமே அணிந்து விளையாடுவோம். ஆனால் நிரந்தரமாக இந்த ஜெர்ஸியை அணிந்து விளையாடுவோமா என்று தெரியவில்லை .
மேலும் நீல நிறம் ஜெர்ஸி தான் இந்திய அணியின் ஜெர்ஸி அதை அணிந்து விளையாடும் போதுதான் பெருமையாக இருக்கும்” என கூறினார்.
ஒரே மாதிரியான ஜெர்ஸியை அணிந்து விளையாடும் போட்டிகளில் ஒரு அணி வேறு ஒரு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட வேண்டும் என ஐசிசி அறிவித்ததால் இந்திய அணி இன்று நீல நிற ஜெர்ஸிக்கு பதிலாக ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025