அமெரிக்காவை கலங்கடித்த இங்கிலாந்து அணி! அரை இறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்று அபாரம்!

Published by
அகில் R

டி20I சூப்பர் 8: டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், அமெரிக்கா அணியும் பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து அமெரிக்கா அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்கா அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அமெரிக்க அணியில் அதிகபட்சமாக என்.ஆர்.குமார் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதுவும் ஒரே ஓவரில் இந்த 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர், மேலும், அதில் ஹாட்ரிக்கும் அடங்கும்.

அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி இலக்கை எடுக்க பேட்டிங் களமிறங்கியது. இந்த எளிய இலக்கான 116 ரன்களை 10.2 ஓவர்களுக்குள் அடித்தால் இங்கிலாந்து அணி அரை இறுதிக்குள் தகுதி பெறுவார்கள் என கணிதங்களால் கூறப்பட்டது.

அதன்படி அதிரடியுடன் தொடங்கிய இங்கிலாந்து அணி அமெரிக்கா அணியின்  பந்து வீச்சை விக்கெட்டுகளை இழக்காமல் பறக்கவிட்டது. அதிலும் ஜோஸ் பட்லர் 38 பந்துக்கு 83* ரன்கள் எடுத்து வெற்றிக்கு முழு முனைப்புடன் செயல்பட்டார்.

இதனால், 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களுக்குள் இந்த இலக்கை எடுத்து வெற்றி பெற்றது. இதனால், இந்த டி20 உலகக்கோப்பை தொடரை முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்குள் தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி… பாக். அணிக்கு அனுமதி!

டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…

11 minutes ago

இரட்டை சதம் விளாசி கிங் கோலி சாதனையை முறியடித்த கில்! புகழ்ந்து தள்ளிய கங்குலி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…

2 hours ago

முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா! ‘ஃபீனிக்ஸ்’ படத்தை பாராட்டிய விஜய்!

சென்னை :  நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…

2 hours ago

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…

3 hours ago

சுற்றுப்பயணம் குறித்து முடிவு? விஜய் தலைமையில் இன்று தவெக செயற்குழுக் கூட்டம்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய உலகச் சாம்பியன் குகேஷ்!

ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…

4 hours ago