[Cricbuzz]
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் 312 ரன்களை இந்திய அணி குவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையே டாமினிகா மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. கேப்டன் ரோஹித் தலைமையில் இந்திய அணியும், கிரைக் ப்ராத்வைட் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்கின.
முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாட ஆரம்பித்தது. இதில் முதலில் களமிறங்கிய வெஸ்ட இண்டீஸ் அணி தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ப்ராத்வைட் கூட ஏமாற்றம் அளித்தார். முதல் நாளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மேற்கிந்திய அணி 64.3 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் நிதானமாக ஆடி முதல் நாளிலேயே நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அடுத்து நேற்று இரண்டாம் நாள் துவக்கத்தில் இருந்தும் அதே நிதானத்தோடு ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர்.
அதிலும் ஜெய்ஸ்வால் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி 143 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். கேப்டன் ரோஹித் ஷர்மா 103 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். சுப்மன் கில் 6 ரன்களில் வெளியேற அடுத்து களமிறங்கிய விராட் கோலி நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். நேற்று இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்து 162 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…