இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களை இழந்து இலங்கை அணி விளையாடி வருகிறது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,3 ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரை, இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார்கள்.அதேப்போன்று,பானுகா ராஜபக்ஷ தனது முதல் ஒருநாள் போட்டியை இலங்கைக்காக விளையாடவுள்ளார்.
அதன்படி,இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி தற்போது கொழும்புவில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில்,டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தாசுன் ஷானகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி,முதலில் களமிறங்கிய அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் எம் பானுகா ஆகியோர் இரண்டு ஓவர் முடிவில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதனையடுத்து,சாஹல் வீசிய பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில் அவிஷ்கா பெர்னாண்டோ அவுட் ஆனார்.இதனால்,இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய ராஜபக்ஷ 22 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவினால் அவுட் செய்யப்பட்டு ஆட்டத்தை இழந்தார்.இவரை தொடர்ந்து பானுகா,தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்க,கேப்டன் தாசுன் ஷானகா மற்றும் சரித் அசலங்கா ஆகியோர் களமிறங்கினர்.அதன்படி,ஷானகா 39 பந்துகளுக்கு 29 ரன்கள் எடுத்து உள்ளார்.ஆனால்,அசலங்கா 65 பந்துகளுக்கு 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.அவரை தொடர்ந்து,வனிந்து ஹசரங்கா,சாமிகா கருணாரத்னே விக்கெட் இழந்தனர்.
தற்போது 37 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்த நிலையில் இலங்கை அணி விளையாடி வருகிறது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…