ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்களை வீசியும், 3 விக்கெட்களை கைப்பற்றியும் பெங்களூர் அணியின் வீரர் சிராஜ் சாதனை படைத்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 39 ஆம் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாத கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 84 ரன்கள் மட்டுமே அடித்தது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அணியின் மோசமான ஸ்கோர், நேற்று கொல்கத்தா அடித்த 84 ரன்கள் தான். மேலும், ஐபிஎல் வரலாற்றிலேயே பவர்ப்பிளே ஓவரில் எடுக்கப்பட்ட மிகக்குறைந்த ரன்கள் அடித்த பட்டியலில் கொல்கத்தா இணைந்தது. நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது, ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்தது.
இதனை பெங்களூர் அணி, 13.3 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 85 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூர் அணி, புள்ளிப் பட்டியலில் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனையை பெங்களூர் அணியில் இளம் வீரர் முகமது சிராஜ் படைத்தார்.
தனது முதல் ஓவரில் ரன் ஏதும் கொடுக்காமல், 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், தனது 2-வது ஓவரிலும் மற்றொரு விக்கெட்டை வீழ்த்தி, மெய்டன் ஓவராக மாற்றினார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இந்த சாதனையை யாவும் படைக்கவில்லை. பந்துவீசிய 4 ஓவர்களில் 2 மெய்டன் ஓவர்களை வீசியது. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாகும்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…