இன்னும் 4 போட்டி இருக்கு … பாத்துக்கலாம் ..- தோல்விக்கு பின் ருதுராஜ் !!

Published by
அகில் R

Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன் பிறகு பேட்டிங் களமிறங்கிய சென்னை அணி, பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் தடுமாறி தட்டி தட்டி 162 ரன்கள் சேர்த்து. அதிலும் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட்டின் 48 பந்துக்கு 62 ரன்கள் சென்னை அணிக்கு ஒரு டீசண்ட் ஸ்கோரை பதிவு செய்ய உதவியது.

அதனை தொடர்ந்து பேட்டிங் களமிறங்கிய பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேனான ஜானி பெய்ர்ஸ்டோ மற்றும் ரூஸோவ் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார்கள். இதன் காரணமாக 17.5 ஓவர்களில் 163 என்ற இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி விளக்கி கூறி இருந்தார். இது குறித்து பேசிய அவர்,”நாங்கள் முதலில் 50-60 ரன்கள் குறைவாக இலக்கை நிர்ணயித்தோம் என்று நினைக்கிறன்.

அது போக பிட்ச் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கு சிறப்பாக இருந்தது, அதே நேரம் நாங்கள் பேட்டிங் செய்யும் போது சிறந்ததாக எங்களுக்கு அமையவில்ல்லை. இதனால் பஞ்சாப்பை அழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடிய ஸ்கோரை விட நாங்கள் குறைவாக இருந்ததாக உணர்கிறேன். கடந்த 2 போட்டிகளின் சூழ்நிலைகளும், அதன் பிட்சும் எங்கள் அணிக்கு மிகவும் உதவும் வகையில் இருந்தன. அது மேலும் எங்களுக்கு வெற்றி பெற உதவியது. இதனால் கடினமாகப் போராடி 200-க்கும் அதிகமான ஸ்கோரைப் பெற எங்களுக்கு அது வாய்ப்பளித்தது.

இன்று இந்த பிட்ச் 180 ரன்களை எடுப்பதற்கான வழியாக கூட அமையவில்லை. மேலும், காயங்களால் வீரர்கள் போட்டியை விட்டு வெளியேற நேர்கயில் அதாவது முதல் ஓவரிலேயே தீபக் சஹர் வெளியேறியது  எங்கள் சூழ்நிலைக்கு அது மேலும் உதவமல் போய்விட்டது. உங்களிடம் 2 பக்கபலமாக பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருக்கும் போது இது போன்ற சூழ்நிலைகள் மிகவும் கடினம்.

இன்னும் எங்களுக்கு 4 போட்டிகள் உள்ளன, பாத்துக்கலாம், நாங்கள் முயற்சி செய்து வெற்றிப் பாதைக்கு மீண்டும் திரும்பி வருவோம்.” என்று போட்டிக்கு பின் ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் 10 போட்டிகள் விளையாடி அதில் 5 போட்டிகளில் தோல்வியடைந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

54 minutes ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

4 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

4 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

5 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

5 hours ago