ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 என்ற கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இந்த தொடர் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளது.நேற்று நடைப்பெற்ற முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றனர்.
இதையடுத்து இன்றைய முதல் போட்டியில் காரைக்குடி காளைகள் மற்றும் திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பவுலிஙை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய காரைக்குடி காளைகள் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் குவித்தனர். இதில் ஶ்ரீகாந்த் அனிரூதா 58 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் பின் களமிறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் 56 பந்தில் 81 ரன்கள் குவித்து போட்டியை சமம் செய்தார். இதன் பின் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.
சூப்பர் ஓவரில் திருச்சி அணிக்காக விளையாடிய முரளி விஜய் 5 பந்தில் 11 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய காரைக்குடி காளைகள் அணிக்காக அனிரூதா தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் விளாசி வெற்றி பெற வைத்தார். அனிரூதா ஆட்டநாயகன் பட்டத்தை பெற்றார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…