இன்றைய போட்டியின் சுவாரஸ்யம்.. ஹைதராபாத் அணியை நம்பி 4 அணிகள்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Published by
பாலா கலியமூர்த்தி

ஹைதராபாத் அணி வென்றால், சென்னை மற்றும் லக்னோ அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதி.

நடப்பாண்டு 16- வது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 64 லீக் போட்டிகள் நடந்துள்ளது. இதில், பெரும்பாலான அணிகளும் 13 போட்டிகளில் விளையாடி உள்ளது.

தற்போது வரை முதல் 4 இடங்களில் அதாவது ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார் என மிகவும் கடுமையான போட்டி நிலவுகிறது. இதுபோன்று வேறு எந்த ஒரு ஐபிஎல் சீசனிலும் நடந்ததில்லை, இந்த சீசனில் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு இன்னும் வாய்ப்பு இருந்து வருகிறது. இருப்பினும், முதல் அணியாக 18 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது குஜராத் அணி.

புள்ளி பட்டியலில் 13 போட்டிகளில் முடிந்து 15 புள்ளிகளுடன் சென்னை இரண்டாவது இடத்திலும், 15 புள்ளிகளுடன் லக்னோ அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இயாதே சமயத்தில் 13 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதன்பின் அடுத்தடுத்த இடங்களில், பெங்களூரு அணி 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் இருக்கிறது.

ராஜஸ்தான்,  கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகள் 13 போட்டிகளில் விளையாடி தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில் போட்டிபோட்டு உள்ளனர். இதில், டெல்லிம் ஐதராபாத் அணிகள் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டதே என கூறலாம். இதனால், முதல் இடத்தை தவிர மற்ற இடங்களுக்கு 7 அணிகள் போட்டி போடுகிறது. இதன் காரணமாக புள்ளி பட்டியல் இன்னும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில், சென்னை, லக்னோ அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறலாம். ஏனென்றால், இரு அணிகளும் தலா 15 புள்ளிகள் பெற்றுள்ளது. அவர்களுக்கு இன்னும் மீதம் ஒரு போட்டி உள்ளது. இதுபோன்று மும்பை அணி 14 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து வரும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

ஆனால், பெங்களூரு அணிக்கு இன்றுடன் சேர்த்து 2 போட்டிகள் உள்ளது. இதில் வெற்றி பெற்றால், மும்பை – பெங்களூர் இடையே கடும் போட்டி நிலவும். பின்னர் ரன் ரேட் அடிப்படையில் முடிவெடுக்கப்படும், இதெல்லாம் இரு அணிகளும் வெற்றி பெற்றால் மட்டுமே சாத்தியம்.  இந்த நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு யார் முன்னேறுவார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரிட்சை நடத்துகிறது.

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வென்றால், சென்னை மற்றும் லக்னோ அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகிவிடும். மேலும், மும்பை, ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பு சற்று அதிகரிக்கக் கூடும். எனவே, இன்றைய போட்டியில் அனைவரது கவனமும் உள்ளது. அதேபோல், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

2 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

5 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago