Virat kohli Workout [Image- Twitter/@viratkohli & HT]
வெஸ்ட்இண்டீஸ் க்கு எதிரான தொடருக்காக முழு வேகத்தில் தயாராகிவரும் விராட் கோலியின் ஒர்க்அவுட் வீடியோ வைரல்.
இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு, அடுத்து மேற்கு இந்திய தீவுகளுக்கு அடுத்த மாதம் ஜூலை 12இல் சுற்றுப்பயணம் செய்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது.
முதலாவதாக ஜூலை 12 ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணிக்கு கிட்டத்தட்ட ஓய்வாக ஒருமாத இடைவேளை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் எப்போதும் முழு உடற்தகுதியுடன் இருப்பவர் என்றால் அது விராட் கோலி தான், களத்திலும், பயிற்சியிலும் முழு உத்வேகத்துடன் செயல்படுபவர்.
களத்தில் வேகமாக ஓடுவதும், ஃபீல்டிங் செய்வதிலும், ரன் ஓடுவதிலும் சிறந்தவர். ஃபிட்னஸ் சோதனையிலும் முன்னிலையில் விராட் கோலி இருக்கிறார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக உடற்பயிற்சிக் கூடத்தில் விராட் பயிற்சி செய்யும் வீடீயோவை அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
34 வயதாகும் விராட், தனது காலுக்கு வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பியுள்ள விராட், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அதிரடி காட்டுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி இந்த வருடம் அடுத்தடுத்து ஆசியக்கோப்பை தொடர் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை என இரு மிகப்பெரிய தொடர்களில் விளையாட இருக்கிறது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…